விஜய்க்கு மக்கள் கொடுத்த புது பட்டம் !!!

மெர்சல்’ படத்தில், விஜய்க்கு மக்கள் பட்டம் கொடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.


Loading...

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், வடிவேலு, சத்யன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் என 4 காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கேரக்டருக்கு, மாறன் எனப் பெயர் சூட்டியுள்ளனர். அவர் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்வதால், ‘மருத்துவ திலகம்’ என்ற பட்டத்தை மக்கள் அளிப்பது போல் படத்தில் காட்டியிருக்கிறார்களாம்.

Watch teaser video here.

Loading...

Leave a Reply